குடும்பத்தகராறு முற்றியதையடுத்து கணவனை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி கைது!

இப்பலோகம, விஜிதபுர பிரதேசத்தில் மனைவி தனது கணவரைக் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், இப்பலோகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கொலையை செய்ததாக கூறப்படும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு முற்றியதையடுத்து மனைவி கணவனை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பலோகம விஜிதபுர, பலுகஸ்வெவ பண்ணை பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.