மட்டக்களப்பில் கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

 


போதையொழிப்பு வாரத்தை யொட்டி மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போது 1 கிலோ 565 கிராம் கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்