பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தக சங்கத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிவாரணம் வழங்கி வைப்பு
பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தக சங்கத்தின் ஒருமில்லியன் நிதி அனுசரணையில், மட்டக்களப்பில் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் கடந்த சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட கோராவளி கிராமத்தில் ஒரு அங்கவீனமானவர் உட்பட 62 பொதிகளும், பேரிலாவெளி கிராமத்தில் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவர் உட்பட 47 பொதிகளும், திகிலிவெட்டை கிராமத்தில் ஒரு அங்கவீனமானவர் உட்பட 66 பொதிகளும் மொத்தமாக 175 குடும்பங்களுக்கு இந்த 5000 பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் அந்தந்த கிராம சேவகர்களின் உதவியுடன்வழங்கி வைக்கப்பட்டன.
இது கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேசசெயலாளர் ராஜ்பாபு தலைமையிலும், லோ.தீபாகரனின் ஒருங்கிணைப்பின் கீழும், பொருளாதார உத்தியோகத்தர்கள், அனர்த்தமுகாமைத்துக உத்தியோகத்தர்களின் உதவியுடனும் இடம்பெற்றிருந்தது


.jpg)





















