பிரான்ஸ் தமிழ் வர்த்தக சங்க வெள்ள நிவாரண பனியின் இரண்டாம் கட்டமாக மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்குதுறை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தேவைப்பாடுடைய மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது
3500 ரூபா பெறுமதியான பொதிகள் 32 வறிய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் கீழ் கிராம சேவக உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாடின் கீழ் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. இந் நிவாரண உதவிக்கு பிரான்ஸ் தமிழ் வர்த்தக சங்கம் நிதியுதவியினை வழங்கியிருந்தது. இணைப்பாளர்களாக தீபாகரன், பிருந்தாபன், தரணிராஜ் மற்றும் அஜந்தன் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் ஆலய தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான கேதீஸ்வரன் மற்றும் சமூக சேவகர்களான முத்துக்குமார், ஜெயசந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.























