.jpeg)
(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தின் முறைசாராக்கல்வி பிரினரால் 2024 இல் க.பொ த. (உ/த) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மாநாடு 02.02.2024 (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது . மண்முனை தென் எருவில் கோட்டத்தில் மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி, மட்/பட்/களுதாவளை ம.வி, மட்/பட்/கோட்டைக்கல்லாறு ம.வி ஆகிய மூன்று மத்திய நிலையங்களிலும், போரதீவுப்பற்றுக் கோட்டத்தில் மட்/பட்/கோவில் போரதீவு விவேகானந்தா ம.வி, மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் ம.வி ஆகிய இரு மத்திய நிலையங்களிலும் என ஐந்து மத்திய நிலையங்களில் 952 மாணவர்களுக்காக நடாத்தப்பட்டது. பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் அவர்களின் வழிகாட்டலில் திரு. இ .ஜீவானந்தராசா பி.க.ப (மாணவர் அபிவிருத்தி), திருமதி.றீற்றா கலைச்செல்வன் இணைப்பாளர் (மு.சா.க) திரு.சி.கவியரசன் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் அவர்களின் ஒழுங்படுத்தலிலும் இடம்பெற்றது வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், இணைப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், முறைசாராக்கல்வி உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு தொழிநுட்பக்கல்லூரியின் விரிவுரையாளர்கள், திறன் அபிருத்தி உத்தியோகத்தர்கள், மனிதவள அபிவிருத்தி உத்யோகத்தர்கள் என பலர் வளவாளர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கினர்.






.jpeg)



.jpeg)










