பூஸா சிறைச்சாலை நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்கள் கண்டுபிடிப்பு!


பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் ஏ மற்றும் டி பிரிவுகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்களை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி, சிறிய கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள், மெமரி சிப்கள், தொலைபேசி சார்ஜர்கள் அகற்றப்பட்ட வெளிப்புற அட்டைகள், டேட்டா கேபிள்கள் மற்றும் ஹேண்ட் ஃப்ரீ ஆகியன நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.