உலகின் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டது!



உலகின் மிகப்பெரியதெனக் கருதப்படும் 26 அடி நீளம் கொண்ட அனகோண்டா பாம்பு வேட்டையர்களால் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமேசான் காடுகளின் கடந்த பெப்ரவரி மாதம் இந்த மிகப்பெரிய பெண் அனகோண்டா பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இந்த பெண் அனகோண்டா பாம்புக்கு அன்னா ஜூலியா' என்று பெயரிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இவ்வகையான பாம்புகள் உலகின் மிகப்பெரிய பாம்புகளாகக் கருதப்படுகின்றன.