வெல்லாவெளியில் இவ் வருடம் க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவச செயலமர்வு

(சித்தா)

இவ்வருடம் க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மாணவர் மேன்மை கல்வி அபிவிருத்திச் சங்கம் இலவச செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது. இந்த வகையில் வெல்லாவெளி பிரதேசப் பாடசாலை மாணவர்களுக்கு இன்று (26.04.2024) மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் செயலமர்வு நடைபெற்றது. சிறந்த வளவாளர்களினால் விஞ்ஞானம், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்கள் நாடாத்தப்பட்டன. 

இச் செயலமர்வில் வெல்லாவெளிப் பிரதேசப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 50 மாணவர்க்ள பங்குபற்றியிருந்தனர். அம் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டு அதற்கான விளக்கங்களும் வளவாளர்களால் வழங்கப்பட்டன.