மட்டக்களப்பில் SKO கழகத்தினால் கராத்தே பாடசாலை திறந்து வைப்பு !



SKO கழகமானது மட்டக்களப்பை தலைமை காரியாலயமாக கொண்டு இலங்கை வரலாற்றில் மாணவர்களுக்காக கராத்தே பாடசாலை அமைத்து மட்டக்களப்பு மாவட்டத்தை சரித்திரப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதன் அடுத்த பக்கமாக வத்தாறுமுலையில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் ஒரே தடவையில் 500 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெறக்கூடிய வகையில் புதிய கராத்தே பாடசாலை அதன் போதனாசிரியர் K.T.PIRAHAS தலைமையிலும் இக் கழகத்தை வழிநடத்துகின்ற அனைத்து போதனாசிரியர்களாலும் கராத்தே மாணவர்கள் , SKOகழகத்துடன் என்றும் கராத்தே வளர்ச்சியில் துணைநிற்கும் பெற்றோர்களாலும் இந்நிகழ்வை கௌரவப்படுத்த வந்த கௌரவ அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்,இசை நடனக்கல்வி பணிப்பாளர்,வலயக்கல்வி பணிப்பாளர்கள், விளையாட்டு அதிகாரிகள்,அதிபர்கள் ,பிரதேச செயலாளர்கள் ஆகியோர் மத்தியில் 11.04.2024 அன்று மாலை 5 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.