ரஸ்யாவில் போரிடும் இலங்கையர்களை இலங்கைக்கு திருப்பி அழைத்துவருவதற்கு உதவ தயார் - முன்னாள் ரஸ்ய தூதுவர் உதயங்க !


ரஸ்யா உக்ரைனில் யுத்தத்தில் போரிடும் இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்துவருவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு உதவதயார் என ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் முதலில் வேலைவாய்ப்பிற்காக புலம்பெயர்ந்து உக்ரைனிற்கு சென்றுள்ளனர் தற்போதுஇவர்கள் போரிடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் சட்டவிரோதமாக சென்றுள்ளனர் என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் அரசாங்கத்தினால் அவர்களின் கரிசனைகளிற்கு தீர்வை காணமுடியாததால் அவர்கள் சட்டவிரோதமாக சென்றுள்ளனர் என தெரிவித்துள்ள உதயங்க அவர்கள் இலங்கை பிரஜைகள் அவர்களை அரசாங்கம் காப்பாற்றவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் புலம்பெயர்ந்திருந்தாலும் ரஸ்ய அரசாங்கத்துடன் அனுமதியுடன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உதயங்க வீரதுங்க போரில் ஈடுபடுவதற்காக இவர்கள் ரஸ்யஅரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர்இது இவர்களைநாடு கடத்துவதை இலகுவாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் இராஜதந்திரியோ அல்லது தூதுவரோ இல்லை ஆனால் இவர்களை நாட்டிற்கு திருப்பிஅழைத்துவரமுடியும் எனவும் உதயங்கவீரதுங்க தெரிவித்துள்ளார்.