இராணுவத்தினரின் வதிவிடத்துக்காக அரச காணிகள் வழங்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக இதன் போது பின்பற்றப்படும் பொறிமுறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடமைகளின் போது உயிர் நீத்தவர்கள், காணாமல் போனோர் மற்றும் இயலாமைக்குட்பட்டோர், ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியில் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முப்படையினர் இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் இராணுவத்தினருக்கு வதிவிடத்துக்காக அரச காணிகள் வழங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பொறிமுறை தொடர்பாக காணி ஆணையாளர் நாயக்கத்தினால் அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் அவ்வப்போது சுற்றறிக்கை ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு முறையின் கீழ் இராணுவத்தினருக்கு உரித்தாகின்ற சலுகைகள் போதியளவாக இன்மையால், அனுபவித்துக் கொண்டிருக்கும் காணிகளுக்காக நிபந்தனைகளுடன் கூடிய சட்டபூர்வ ஆவணங்களில் காணப்படுகின்ற மட்டுப்பாடுகளால் குறித்த காணிகளில் உண்மையான பொருளாதார பெறுமதிகளை எடுத்தியம்பப்படுவதில்லை என்பது கண்காணிக்கப்பட்டுள்ளது.
அதனால் இராணுவத்தினருக்கு காணிகளை வழங்கும்போது தற்போது கடைப்பிடிக்கப்படுகின்ற பொறிமுறையால் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் உள்ளடங்கிய தற்போதுள்ள பொறிமுறையை திருத்தம் செய்வதற்காக தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.