ஊவா மாகாணம் பதுளை கந்தேகெதர சார்ணியா தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் கௌரவிப்பு விழாவும், சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவும் கந்தேகெதர இலவூற்றில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில் 2024 மே மாதம் 25 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
1980 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை சுமார் 30 ஆண்டு காலம் இப் பிரதேசத்திற்குக் கல்விப்பணி செய்து சமுக வளர்ச்சிக்கு வித்திட்ட அதிபர், ஆசிரியர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் இவ் விழாவில், இக் காலத்தில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களிலிருந்து கல்விக்கண் திறந்த ஆசான்களை நன்றி கூறிப் பாராட்டி கௌரவிப்பது விசேட அம்சமாகும். இது வெறுமனே மாணவர்கள் கூறும் நன்றி மாத்திரமல்ல ஒட்டுமொத்த மலையகமே வடக்கு, கிழக்கிற்குக் கூறும் நன்றியாகும். அத்துடன் தமிழ் ஆசான் வெல்லாவெளி விவேகானந்தத்தின் 'உமிச் சட்டி' சிறுகதைத் தொகுப்பு வெளியீடும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளதாகவும்; அன்றைய தினம் சார்ணியா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களையும் பங்குகொண்டு விழாவை சிறப்பிக்குமாறும் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.













