இலங்கையிலிருந்து அகதியாக சென்ற தமிழரானா இளங்கோ இளவழகன் இப்ஸ்விச் போரோ (Ipswich Borough )மேயராக பதவியேற்றுள்ளார்.
தொழிலாளர் கட்சியின் இளங்கோ இளவழகன் குறித்த பேரூராட்சியின் ஆண்டு கூட்டத்தில் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் சம்பிரதாயபூர்வமாக பதவியேற்றார்.
முன்னதாக இளங்கோ இளவழகன் நகரமொன்றின் பதில் மேயராக செயற்பட்டிருந்தார்.
இலங்கையை விட்டு வெளியேறிய இளவழகன் இந்தியா, உகாண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் வாழ்ந்து பணி செய்து பிரித்தானியாவைச் சென்றடைந்தார்.
"நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்த பெரிய நகரத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டமைக்கு மிகவும் பெருமைப்படுகிறேன்" என இளங்கோ இளவழகன் குறிப்பிட்டுள்ளார்.














