கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மேலும் 10 பேரிடமிருந்து 300 மில்லியன் ரூபா இழப்பீட்டு கோரி வழக்கு தாக்கல் !


அரசாங்க வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்பட்ட ‘பிரெட்னிசோலோன் அசிடேடீன்’ ‘Prednisolone Acetatean’ கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதால் நிரந்தரமாக பார்வையிழந்த மூன்று நோயாளிகள், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மேலும் 10 பேரிடமிருந்து 300 மில்லியன் ரூபா இழப்பீட்டு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று (20) வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

கண்களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் அவர்களது உயிருக்கு சாத்தியமான அச்சுறுத்தல்களுக்காகவே அவர்கள் ,இவ்வாறு ,இழப்பீடு கோரியுள்ளனர்.

கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனக சந்திரகுப்த, தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு ,பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன, கலாநிதி விஜித் குணசேகர, கலாநிதி அசேல குணவர்தன, டொக்டர் ரொஹான் எதிரிசிங்க, கலாநிதி மகேந்திர செனவிரத்ன, Chamee Chemist (Pvt) Ltd of Yakkala, யின் Indiana Ophthalmics LLP மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த முறைப்பாடுகளின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுவை கந்தபொல பிரதேசத்தை சேர்ந்த மக்கரி இராஜரத்தினம் தாக்கல் செய்துள்ளார். தாம் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி அங்குள்ள மருத்துவ ஊழியர்களால் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.