மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம் .



கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ,வேதபாராயணங்கள் ஒலிக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்றது.

தமது தாய்,தந்தையரின் ஆன்ம ஈடேற்றத்திற்காகப் பிதிர்க்கடனைச் செலுத்தும் வகையில் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் வருகை தந்திருந்ததைக் காண முடிந்தது.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற தீர்த்தோற்சவத்துடன் ஆலய மகோற்சவம் கொடியிறக்கலுடன் நிறைவு பெற்றது.