யாழ்ப்பாணம் தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தில் கண்மணி கனகசிங்கத்தின் நினைவுமலர் வெளியீடு

(சித்தா)

ஓய்வு பெற்ற கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் ஆங்கில விரிவுரையாளர் அமரர் கண்மணி கனகசிங்கம் அவர்களின் நினைவாக கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் 1991/1992 ஆம் கல்வியாண்டு ஆசிரிய மாணவர்களின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பினைச் சேர்ந்த முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.யோகராசா தலைமையில் நினைவு மலர் ஒன்றினை யாழ்ப்பாணம் தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நினைவு மலரானது கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் 1991/1992 ஆம் கல்வியாண்டு ஆசிரிய மாணவர்களின் ஆக்கங்களும், குடும்ப உறவினர்களின் ஆக்கங்களும் கொண்டு கனதிநிறைந்ததாக உள்ளது. மட்டக்களப்பினைச் சேர்ந்த ஓய்வு நிலை ஆசிரியர் சாமித்தம்பி புண்ணியமூர்த்தி இம் மலரினை தொகுத்து வடிவமைத்து நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.