(சித்தா)
மட்/பட்/குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா பாடசாலை அதிபர் சோமசுந்தரம் செல்வம் தலைமையில் 07.10.2024 பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
ஆரம்பப் படிமுதல் உயர்தரம் வரை கற்பித்து எமை சமூகத்தில் உயர்நிலை அடையச் செய்த ஆசான்கள் என்றென்றும் போற்றி வணங்கப்படவேண்டியவர்கள். இச் சிந்தனையுடன் மட்/பட்/குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் கல்விப் பணியாற்றி ஓய்வு நிலையிலுள்ள ஆசான்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் இவ்வாண்டுக்கான ஆசிரியர் தினம் அமைந்திருந்தமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கொள்ளப்பட்டது.
இந் நிகழ்வில் இப் பாடசாலையில் ஓய்வு நிலையிலுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் கௌரவிக்குமுகமாக பொன்னாடை போர்த்தி, பரிசுப் பொருட்கள் வழங்கியதுடன் மாத்திரமன்றி முன்னாள், இந்நாள் அதிபர், ஆசிரியர்கள் இணைந்து விருந்துண்டு ஆசிரியர் தினத்தை மிகவும் விமரிசையாகக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.இவ் விழாவில் மாணவர்களின் ஒழுங்கமைப்பில் ஆசிரியர்களைப் பாராட்டி பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பிடித்திருந்தன.





















