வாழைச்சேனையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட படகுகளுக்கு சேதம் !


வெள்ளம் காரணமாக வாழைச்சேனை ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததால் மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திற்குள் வெள்ள நீர் பிரவேசித்ததுடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆழ்கடல் இயந்திரப்படகுகளும் சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக முகாமையாளர் ஜே.ஆர். விஜிதரன் தெரிவித்தார்.

வாழைச்சேனை ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததால் அந்த துறைமுகத்தில் வியாரம் இடம்பெறும் இடங்களில் நீர் பிரவேசித்து வியாபாரிகள் பாதிக்கப்பட்டதுடன் கடும் காற்று, வெள்ளம் காரணமாக ஆழ்கடல் இயந்திரப்படகுகளும் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்துள்ளதாக மீன்பிடி துறைமுக முகாமையாளர் தெரிவித்தார்.