மகளிர் என்றாலே தாய்மை, சக்தி, பொறுமை, காதல், அர்ப்பணிப்பு போன்ற மகத்தான பண்புகள் நினைவுக்கு வரும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் உலகெங்கும் பெண்களின் முன்னேற்றம், உரிமைகள், சமூகத்தில் அவர்களின் பங்கு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
மகளிர் தினத்தின் வரலாறு
சர்வதேச மகளிர் தினம், சுருக்கமாக ஐடபிள்யுடி என்றும் அழைக்கப்படுகிறது. இது தொழிலாளர் இயக்கத்திலிருந்து வளர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வாக மாறியது.
1908இல் 15,000 பெண்கள் நியூயார்க் நகரத்தின் வழியாக குறுகிய வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றபோது அதன் விதைகள் வேரூன்றப்பட்டன. ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது.
இந்த நாளை சர்வதேசமயமாக்க வேண்டும் என்ற எண்ணம் கம்யூனிஸ்ட் ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கிளாரா ஜெட்கின் என்ற பெண்ணிடமிருந்து வந்தது.
1910இல் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் அவர் இந்த யோசனையை அவர் பரிந்துரைத்தார். அங்கு 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் இருந்தனர். அவர்கள் அவரது ஆலோசனையை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
இது முதன்முதலில் 1911இல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழா 2011இல் கொண்டாடப்பட்டது.
எனவே இந்த ஆண்டு தொழில்நுட்ப அளவில் 111வது சர்வதேச மகளிர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இதன் அடிப்படையில் 1911ஆம் ஆண்டு முதல் பல நாடுகளில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. 1977ஆம் ஆண்டு ஐநா (United Nations) மார்ச் 8ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
1975இல் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை கொண்டாடத் தொடங்கியபோது அனைத்தும் அதிகாரபூர்வமாக்கப்பட்டன. அதையொட்டி ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் கருப்பொருள் (1996 இல்) "கடந்த காலத்தைக் கொண்டாடுதல், எதிர்காலத்திற்கான திட்டமிடல்" என்பதாகும்.
சர்வதேச மகளிர் தினம் சமூகத்திலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் பெண்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டாடும் நாளாக மாறியுள்ளது.
அதே சமயம் அன்றைய அரசியல் வேர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்ந்து சமத்துவமின்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன.
மகளிரின் பெருமை
பெண்கள் ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் புரிந்துவருகிறார்கள். கல்வி, அறிவியல், அரசியல், விளையாட்டு, தொழில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் முன்னேறி வருகின்றனர். இன்றைய சமூகத்தில் பெண்கள் வளர்ச்சி அடைய வழிவகுப்பதும், சமத்துவத்தை நிலைநாட்டுவதும் அனைவரின் பொறுப்பாகும்.
மகளிருக்கு வழங்க வேண்டிய உரிமைகள்
சமன் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்பு
பாதுகாப்பான சூழல்
தனிமனித சுதந்திரம்
ஆண்களின் போன்று சம உரிமை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை
மகளிர் தினம் கொண்டாடுவதன் நோக்கம்
பெண்களின் பங்களிப்பை பாராட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெண்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
சமத்துவமான சமூகத்தை உருவாக்க வழிவகை செய்தல்.
முடிவுரை
மகளிர் இல்லாமல் இந்த உலகமே இல்லை. பெண்களுக்கு சம உரிமை, பாதுகாப்பு, மதிப்பு வழங்கும் பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. மகளிரின் திறனை உணர்ந்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். "பெண்கள் முன்னேற்றம், சமூகத்தின் முன்னேற்றம்" என்ற உன்னத நோக்கத்துடன் மகளிர் தினத்தை உற்சாகமாகக் கொண்டாடுவோம்!
"மகளிர் எழுச்சி – உலக முன்னேற்றம்!"
இரண்டாம் வருட மாணவி ,
கல்விமானி (சிறப்பு)
ஆரம்பக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் ,
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்