இனியபாரதியின் இருசகாக்கள் கல்முனை மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது


இனியபாரதியின் கல்முனையைச் சேர்ந்த  சகாவான டிலக்ஷன் கல்முனையில் வைத்து சனிக்கிழமை (30) சி.ஜ.டியினர் விசாரணைகள் மேற்கொண்டதுடன் ,   வெளிநாடு தப்பி ஓடமுயற்சித்த காரைதீவைச் சேர்ந்த இன்னொரு சகாவான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் கட்டுநாயக்கா விமான நிலையத்ததில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கைது செய்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன . 

ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக படுகொலை செய்யப்பட்ட பிரதேசசபை தவிசாளரின் மனைவி சிஜடியிடம் முறைப்பாடு செய்திருந்தார்

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த ஜூலை 6ம் திகதி திருக்கோவிலில்  இனியபாரதியையும் அவரது சகாவான மட்டு சந்திவெளியைச் சேர்ந்த  சசிதரன் தவசீலன் என்பவரை சந்திவெளியில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர்.

வவுணதீவு பாவக்கொடிச் சேனையைச் சேர்ந்தவரும்,  காரைதீவீல் திருமணம் முடித்து வாழ்ந்துவரும் வன்னியசிங்கம் பரமேஸ்வரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்ற நிலையில் அங்குவைத்து கடந்த 12ம் திகதி சி.ஜ.டி யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்