பொது இடத்தில் வெற்றிலை மென்று துப்பியவருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டம் !


பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.

பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் சந்தையில் வெற்றிலைமென்று, பொது இடத்தில் துப்பிய குற்றச்சாட்டில், அவருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் முன்னிலையான வியாபாரி தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவரை எச்சரித்த நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.