மட்டக்களப்பு, கருவேப்பங்கேணி புனித சூசையப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் இன்று(21) காலை 6:00 மணி அளவில் நினைவுகூறப்பட்டது.
2019 ஆண்டு ஏப்ரல் 21 உயிர்த்தஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 31 ஆத்மாக்களுக்கும் விளக்குகள் ஏற்றப்பட்டு ,மலர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தி தேவாலயத்தின் பங்குத்தந்தை ஜோச் ஜீவராஜ் அவர்களினால் கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிராமத்தின் பொதுமக்கள், மற்றும் இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.