எரிபொருள் விலைகளில் திருத்தம் !


இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதியவிலை 293 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 341 ரூபாவாகும்.

ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 274 ரூபாவாகும்.

சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 178 ரூபாவாகும்.

இந்நிலையில், ஐ. ஓ. சி. நிறுவனம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் விலைத்திருத்தத்திற்கேற்ப திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.