மட்டக்களப்பின் அதிகஷ்ட பிரதேசத்திலிருந்து பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி சாதனை படைத்த மாணவன் - காணொளி

  

வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசமான அடிப்படை வசதிகளற்ற பன்சேனை பகுதியிலுள்ள பனையறுப்பான் எனும் ஒரு சிறிய கிராமத்திலிருந்து  முதல் முறையாக பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியிருக்கிறார் நேசதுரை தசாகரன் , 
தான் கல்வி கற்ற பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை , ஆய்வுகூட வசதிகளற்ற நிலையில் , நகர்ப்புற தனியார் வகுப்புக்களுக்கு செல்லாமல் சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பினர் யாழ் இந்து ஆசிரியர்களை கற்பித்தலில் நடாத்தும் zoom வகுப்பில் முழுமையாக இணைந்து கொண்டு A 2B பெறுபேற்றை பெற்றுள்ளதாக கூறியுள்ளார் .

பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ள குறித்த மாணவன் நாட்டின் பின் தங்கியுள்ள எப் பிரதேசத்திலிருந்தும் தன்னுடைய விடாமுயற்சி  மற்றும் தன்னம்பிக்கை ஊடாக பொருளாதாரம் கல்விக்கு ஒரு தடையில்ல என்பதுடன் மேலதிக கல்விக்கு நகர்புறம் செல்லாமல் தான் கல்வி கற்ற அரசடித்தீவு பகுதியிலே நிலைகொண்டு சங்காரவேல் பவுண்டேஷன் யாழ் இந்து கல்லூரியுடன்  இணைந்து  நடாத்திய  zoom  வகுப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உயர்தர பரீட்சைக்கு தயார் படுத்தி வெற்றி கண்ட நேசதுரை தசாகரன் பிற மாணவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கின்றார் .