கணேமுல்ல சஞ்சீவ படுகொலை ; முன்னாள் சிறைச்சாலை அதிகாரி பிணையில் விடுதலை !



பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிறைச்சாலை அதிகாரியை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது.

பூஸா சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.