மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவிகள் கௌரவிப்பு !

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகி இருந்தன.

இந்நிலையில் க.பொ.த (உயர்தரப்) பரீட்சை கலைப்பிரிவில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாணவி மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு  மகாஜனக் கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் பாடசாலை வளாகத்தில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.