ஹப்புத்தளை-வெலிமடை வீதியில் அசோகரமய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வெளிநாட்டு பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பக்கவாட்டு சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களும் சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலயி நாட்டை சேர்ந்த 80 மற்றும் 76 வயதான பெண்களே விபத்தில் காயமடைந்துள்ளனர்.