மட்டக்களப்பு மாவட்ட மத்தி வலயத்திலிருந்து அதிக மாணவர்கள் மருத்துவபீடத்திற்குத் தெரிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மத்தி வலயத்திலிருந்து அதிக மாணவர்கள் மருத்துவபீடத்திற்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இக்கல்வியாண்டில் மருத்துவபீடத்திற்கு திறமை அடிப்படையில் 37 மாணவர்களுக்கும், மாவட்ட ஒதுக்கீடு + பின்தங்கிய பிரதேச ஒதுக்கீடு அடிப்படையில் 38 மாணவர்களுக்கும் மருத்துவபீடத்திற்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.

இத்தடவையும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் மருத்துவபீடத்திற்கு அனுமதி பெற வாய்ப்புண்டு.

ஆண்கள் -33(44%)
பெண்கள் -42(56%)


Rank 1 -37 வரையிலான மாணவர்கள் திறமை அடிப்படையில் (Merit Based) மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறுவர்.

Rank 38 -75 வரையிலான மாணவர்கள் மாவட்ட ஒதுக்கீடு மற்றும் பின்தங்கிய பிரதேச ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறுவர்.

இவ் வருடமும் மட்டக்களப்பு மத்தி வலயத்தில் இருந்தே பெருமளவு மாணவர்களுக்கு மருத்துவ பீடத்திற்கு அனுமதி கிடைக்கும்.

*மட்டக்களப்பு மத்தி வலயம் -30 (41%)
*மட்டக்களப்பு வலயம் -25
*பட்டிருப்பு வலயம் -13
*கல்குடா வலயம் -05
*மட்டக்களப்பு மேற்கு வலயம் -01


மேலும் 76 - 79 Rank வரை பல் மருத்துவபீடத்திற்கும் 80-84 Rank வரை விலங்கு மருத்துவபீடத்திற்கும் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பின்வரும் பாடசாலைகளில் முதலாம், இரண்டாம் தடவை தோற்றி,மருத்துவபீடத்திற்கு அனுமதி பெற்ற மாணவர் தொகை.

*மட்/காத்தான்குடி மீராபாலிகா ம.வி -07
*மட்/வின்சென்ட் மகளிர் கல்லூரி -08
*மட்/பட்டிருப்பு மத்திய கல்லூரி -08
*மட்/புனித மிக்கேல் கல்லூரி -07+02 =09
*மட்/ஏறாவூர் அலிகார் -05
*மட்/ஓட்டமாவடி மத்திய கல்லூரி -04
*மட்/சிவானந்த வித்தியாலயம் -02
*மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி -02
*மட்/காத்தான்குடி மத்திய கல்லூரி -03
*மட்/பெரிய கல்லாறு மத்திய கல்லூரி -02
*மட்/கோட்டைக் கல்லாறு ம.வி. - 02
*மட்/செங்கலடி மத்திய கல்லூரி - 02
*மட்/அல் ஹிதாயா ம.வி - 03
*மட்/அல் ஹிரா வித். -01
*மட் புனித சிசிலியா மகளிர் கல்லூரி -01
*மட்/விவேகானந்தா மகளிர் கல்லூரி -01
*மட்/ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயம் -01
*மட்/ஏறாவூர் ரகுமானியா வித்தியாலயம் -01
*மட்/துறை நீலாவணை ம.வி. - 01
*மட்/கிரான் மத்திய கல்லூரி - 01
*மட்/வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயம் -01
*மட்/முதலைக்குடா ம.வி - 01
*மட்/வாழைச் சேனை அந்நூர் தேசிய பாடசாலை - 01


இது தவிர, தனிப்பட்ட பரீட்சார்த்தியாக இரண்டாவது/ மூன்றாவது தடவையாக தோற்றிய 08 மாணவர்களுக்கும் மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறத்தகுதி பெற்றுள்ளனர்.