
மட்டக்களப்பு, வாழைச்சேனை, புணானை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
இவர் நேற்றைய தினம் வயல் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும் போது காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.