.jpeg)
(ரபி ப்பிரியா)
அபிஷா மே 18 ஆம் திகதி 2025அன்று Toronto இல் இடம்பெற்ற தேசிய French spelling போட்டியில் 1 ஆம் இடத்தைப் பெற்று பெருமை தேடித் தந்துள்ளார் . இவர் இக்னேஸ் , ஷாமா தம்பதிகளின் புதல்வியாவார். இலங்கை மட்டக்களப்பை பூர்விகமாகக் கொண்டவர். தாய் மொழி தமிழைக் கொண்ட இவர் French மொழியில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு 2024 இல் தேசிய ரீதியில் 2 ஆம் இடத்தை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கான வெற்றிக் கிண்ணத்தை அம்மையார் ரோசா டொறபோ மற்றும ஹார்வே மொரையில் என்பவர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.
இவர் போட்டியில் முதலிடத்தைப் பெற்றது பற்றி பாடசாலை நிர்வாகம், கல்வித்திணைக்களம் தங்களது பாராட்டுக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் பலராலும் பாராட்டப்பட்ட விடயம் என்னவேன்றால் பல கடினமான சொற்களை இலகுவாக இனம் கண்டு கூறியமையாகும்.