2025 ஆம் ஆண்டில் வாழும் தனிநபரொருக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்கு 16,318 ரூபா தேவை - புள்ளிவிபரத் திணைக்களம் ஆய்வறிக்கை



இலங்கையில் வாழும் தனிநபரொருவரின் மாதாந்த செலவு தொடர்பில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின்படி, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் தனிநபரொருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டில் வாழும் தனிநபரொருக்கு தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்கு 16,318 ரூபா தேவைப்படுவதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளின் அடிப்படையில் தனிநபரொருவரின் மாதாந்த செலவுகள் பின்வருமாறு,

2012 - 2013 ஆம் ஆண்டுகளில் 5,223 ரூபாய்
2016 ஆம் ஆண்டில் 6,117 ரூபாய்
2019 ஆம் ஆண்டில் 6,966 ரூபாய்
2024 ஆம் ஆண்டில் 16,476 ரூபாய்
2025 ஆம் ஆண்டில் 16,342 ரூபாய்