நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு வெல்லப்பட்டுள்ளது


நாட்டின் லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு 16ஆம் திகதி திங்கட்கிழமை வென்று சாதனை படைத்துள்ளது.

இது தேசிய லொட்டரி வாரியத்தின் மெகா பவரின் 2210வது சீட்டிழுப்பில் ரூ.474,599,422 சூப்பர் பரிசு தொகையாகும்.

வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை கோகரெல்லாவைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்றுள்ளார்.

முன்னதாக, தேசிய லொட்டரி வாரியத்தின் மெகா பவர் லொட்டரி, லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய பரிசான ரூ.230 மில்லியன் சூப்பர் பரிசை தற்போது வென்று சாதனை படைத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.