
சர்வதேச நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்பவர்க ளுக்கான புதிய சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.13 நாடுகளில் இப்புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.
சுயதொழில் மூலமான தொழில்துறை மற்றும் நிறுவனத் துறை வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்கள்,குறித்த நாடுகளில் வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த வேண்டியதை சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் அமுல்படுத்தியுள்ளன. ஏற்கனவே கடந்த ஜூன் 07 ஆம் திகதி முதல் இதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. நேற்று வரை இந்த நடைமுறை ஒத்திவைக்கப்பட்டதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
புதிய நடைமுறைக்கு அமைய, சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், இஸ்ரேல், ஜோர்தான், லெபனான், மாலைதீவு, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்புக்கு
செல்வோர் இப்பதிய திட்டத்தை பின்பற்றுவது அவசியமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பதிவைப் பெறுவதற்கு அவர்களின் சேவை ஒப்பந்தம் அந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தொழிலாளர் மற்றும் நலன்புரிப் பிரிவுகளால் சான்றளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்காக 60 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கடந்த காலங்களில், ஆட்கடத்தல் காரணமாக இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு தீர்வாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.