அதனையடுத்து, இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கான தண்டனை ஜூலை 24ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய, இணையவழி விசா முறைமையை இடைநிறுத்தி வைக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.