வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!



வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

துபாயில் வேலை செய்த இலங்கையர் ஒருவர் துபாயில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்களை பதிவிட்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

“எமது வெளிநாட்டு வேலை வாய்ப்பு சேவையின் ஊடாக பல நபர்கள் பயனடைந்துள்ளனர்” என கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கiளை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான போலி விளம்பரங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது  0112864123 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.