பஸ் கட்டணத்தை 0.55 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பஸ் கட்டண திருத்த சட்டத்தின்படி, பஸ் கட்டணத்தை 2.5 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்திருந்த போதிலும் நேற்று திங்கட்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக பஸ் கட்டணத்தை 0.55 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 0.55 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.