நான் வீடமைப்பு விவகார அமைச்சராகயிருந்தபோது விற்பனை செய்யப்பட்ட சில கடைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக என்னை அழைத்துள்ளனர் என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச அவர்கள் ஒரு திகதியை குறிப்பிட்டு அன்றைய தினம் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர் அன்றைய தினம் எனக்கு வேறு ஒரு வழக்கு உள்ளதால் சமூகமளிக்க முடியாது என தெரிவித்து நான் கடிதம் எழுதியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் போல அவர்கள் என்னை சிறையில் அடைத்தால் கிடைக்கின்ற நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவேன் கடந்த தடவை அவர்கள் என்னை சிறையில் அடைத்தவேளை இரண்டு நூல்களை எழுதி ஐந்து ஓவியங்களை வரைந்தேன்,இம்முறை சிறையில் அடைத்தால் அவ்வாறு நூல்களை எழுதுவேன் என தெரிவித்துள்ளார்.