4.7.2025 அன்று பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகமும், களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த அலுவலகமும் ஒன்றிணைந்து மட்டக்களப்பு வனபரிபாலனத்திணைக்களம், மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசெயலம் (களுவாஞ்சிகுடி) என்பவற்றின் பங்களிப்புடன் மட்/பட்/செட்டிபாளையம் ம.வி இல் பாடசாலைகளில் பசுமைச்சூழலை மேம்படுத்தும் செயற்றிட்டத்திற்கமைய மரநடுகை செய்யப்பட்டது. இந்நிகழ்வு வலயக்கல்விப்பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலமையில் மேற்கொள்ளப்பட்டதுடன் இதில் பிரதம அதிதியாக களுவாஞ்சிகுடி நீதவான் J.B.A றஞ்சித்குமார் அவர்களும், ம.தெ.எப உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகௌறி, பிரதிக்கல்விப்பணிப்பாளர் செ.சுரேஸ், ஒய்வுநிலை செயலாளரும், பழையமாணவருமான S.அமலநாதன் அவர்களும் அதிதிகளாக கலந்துகொண்டதுடன் முறைசாராக்கல்வி இணைப்பாளர் றீற்றா கலைச்செல்வன், மேலதிக பிராந்திய வனவள உத்தியோகத்தர் F.முகமட் ஷிபான், சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் .K.புவனேந்திரன்,சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் M.N.M றபாஸ், சுற்றாடல் உத்தியோகத்தர் அ.நிசாந்தன், வழிகாட்டல் ஆலோசனை உத்தியோகத்தர், கிராமசேவை உத்தியோகத்தர், அதிபர்,ஆசிரியர்,மாணவர்களும் கலந்துகொண்டு மரநடுகை செயற்றிட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது பாடசாலைகளில் பசுமைச்சூழலை ஏற்படுத்தும் மரநடுகையின் பயன் தொடர்பாக நீதிபதி அவர்களால் மாணவர்களுக்கு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4