நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காண பொது ஆலோசனை கூட்டம் இன்று (02) நடைபெறும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இதற்கான கருத்துக்களை வாய்மொழியாகப் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2002 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறை எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து பல தரப்பினர்கள் தங்கள் கருத்துக்களை இந்தக் கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாக சூரிய மின்சக்தி நிர்மாண சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஷியாம் பதிராஜா தெரிவித்தார்.