அரசாங்க சேவையினை பெற்றுக்கொள்ளும் போது தங்களது தாய் மொழியின் ஊடாக சேவையினை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையினை ஏற்படுத்துவோம் : அரச கரும மொழிகள் ஆணையாளர் நாயகம் திலக் நந்தன ஹெட்டியாராச்சி



அரச கரும மொழிகள் மற்றும் வாரத்தை நடைமுறைபடுத்துவதை முன்னிட்டு பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டுள்ளோம். இலங்கை சமுதாயத்தில் நவீனமயமான நாகரீகமிக்க சமூகத்தை ஊருவாக்குவதற்கு இந்த அரச கரும மொழி பெரும் பங்குவகித்துள்ளது. என்பதை அரச கரும மொழிகள் கொள்கைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.என அரச கரும மொழிகள் ஆணையாளர் நாயகம் திலக் நந்தன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

அரச கரும மொழிகள் தினம் மற்றும் அரச கரும மொழிகள் வாரத்தை நடைமுறைபடுத்துவது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அரச மொழிகள் ஆணையாளர் நாயகம் திலக் நந்தன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்க சேவையினை பெற்றுக்கொள்ளும் போது தங்களது தாய் மொழயின் ஊடாக சேவையினை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையினை ஏற்படுத்துவோம். பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடாக வவுனியா பிரதேசத்தில் மொழி வாரத்தை சிறப்பிக்கவுள்ளதோடு,கண்டி அஸ்கிரிய மகாவிகாரை பௌத்த அறநெறி பாடசாலையில் கல்வி கற்கும் துறவிகளுக்கான தமிழ் மொழி கற்ககூடிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளளோம்.

அதேபோன்று இந்து மத குருமார்கள், பாதிரிமார்கள் மற்றும் மௌலவிகள் ஆகியோருக்கான மொழி ரீதியான கல்வி நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளளோம். இத்தகைய முயற்சிகள் மொழி மற்றும் மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ளன

அரச கரும மொழிகள் மற்றும் வாரத்தை நடைமுறைபடுத்துவதை முன்னிட்டு பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டுள்ளோம். இலங்கை சமுதாயத்தில் நவீனமயமான நாகரீகமிக்க சமூகத்தை ஊருவாக்குவதற்கு இந்த அரச கரும மொழி பெரும் பங்குவகித்துள்ளது. என்பதை அரச கரும மொழிகள் கொள்கைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இலங்கை என்பது பல்லின, பல்மத மற்றும் பல்வேறு கலாச்சார மரபுகளை தன்னகத்தே கொண்ட நாடாகும். இந்த ஒற்றுமைக்கான வலுவான ஆதாரமாக விளங்குவது “மொழி” ஆகும்.

அரச கரும மொழிகள் திணைக்களத்தின் கொள்கையில் முக்கிய குறிக்கோளாகக் குறிப்பிடப்படுவது, நல்லிணக்கத்தையும், சமூகங்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதே ஆகும்.

“மொழி வார நிகழ்வு” வெறும் விழாவாக அல்லாமல், சமூகத்தைக் கட்டியெழுப்பும், ஒருமைப்பாட்டை வலியுறுத்தும், மற்றும் நிலைத்த முன்னேற்றத்திற்கான அடித்தளமாகவும் அமைகிறது. இது இன, மத, மொழி எல்லைகளை கடந்து ஒற்றுமையை நோக்கி பயணிக்கும் இலங்கையின் வளர்ச்சி பாதையில் ஒரு மைல்கல்லாக திகழ்கிறது.

இந்த மொழி வாரத்தை முன்னிட்டு, இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கத்துடன், பல இன மக்களுடன் கூடிய வவுனியா பிரதேசம் இந்த நிகழ்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் இடமாகக் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

“ மக்கள் தினம்” என்ற தொனிப்பொருளில் இலங்கை பிரஜைகளின் மத்தியில் மொழி உரிமையினை நிலை நாட்டுவதற்கும் மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்குமான வாரமாக மொழி வாரத்தை கருதுகின்றோம்.

அரசாங்க சேவையினை பெற்றுக்கொள்ளும் போது தங்களது தாய் மொழயின் ஊடாக சேவையினை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையினை ஏற்படுத்துவோம். பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடாக வவுனியா பிரதேசத்தில் மொழி வாரத்தை சிறப்பிக்கவுள்ளதோடு,கண்டி அஸ்கிரிய மகாவிகாரை பௌத்த அறநெறி பாடசாலையில் கல்வி கற்கும் துறவிகளுக்கான தமிழ் மொழி கற்ககூடிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளோம்.

அதேபோன்று இந்து மத குருமார்கள், பாதிரிமார்கள் மற்றும் மௌலவிகள் ஆகியோருக்கான மொழி ரீதியான கல்வி நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளளோம். இத்தகைய முயற்சிகள் மொழி மற்றும் மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ளன என மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார , அரச மொழிகள் ஆணையாளர் நாயகம் திலக் நந்தன ஹெட்டியாராச்சி ,அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க , அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் சமிந்த மஹலேகம் , தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன் மற்றும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.