பட்டிருப்பு கல்வி வலயத்தில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வுச் செயற்பாடு













(சித்தா)

இன்று (05.08.2025) பட்டிருப்பு கல்வி வலயத்தின் மட்/பட்/செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடம், விவசாயபீடம், தொழிநுட்பபீடமும் இணைந்து (SLAAS (SRILANKA. ASSOCIATION FOR THE ADVANCEMENT OF SCIENCE EASTERN CHAPTER) இன் அனுசரணையுடன் க.பொ.த சாதாரண தரத்தில் கற்கும் 100 மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

 இதன்போது க.பொ.த. உயர்தரத்தில் கற்கும் பாடத்துறைகள், பாடங்கள், பல்கலைக்கழக அனுமதியை பெறக்கூடிய துறைகள், எதிர்கால வேலை உலகிற்குப் பொருத்தமான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வளவாளர்களாக விவசாயபீடத்தின் விவசாய உயிரியல் பேராசிரியர் நிறஞ்சலா றொட்ணி, விஞ்ஞான பீடத்தின் பௌதீகவியல் பேராசிரியர் P.R.. பெனாண்டோ, தொழிநுட்ப பீடத்தின் உயிரியல் தொழிநுட்ப சிரேஸ்ட. விரிவுரையாளர் கலாநிதி வனிதா பிரசன்னாத், உயிரியல் பீடத்தின் சிரேஸ்ட்ட விரிவுரையாளர் கலாநிதி முத்துலட்சுமி வினோபா அவர்களும் கலந்து கொண்டதுடன்

 முறைசாரக்கல்விப் பிரிவின் இணைப்பாளர் றீற்றா கலைச்செல்வன், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் சி கவியரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். வலயத்திற்குட்பட்ட க.பொ.த சாதாரண தர மாணவர்கள் அனைவருக்கும் கொத்தணி அடிப்படையில் இவ் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.