மட்டக்களப்பு வாவியில் கழிவுகள் உட்புகுவதை தடுக்க தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் ஆரம்பம்



இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியிவில் வீதியில் உள்ள கழிவுகள் மற்றும் மண் என்பன வாவியினுள் உட்புகுவதை தடுத்து மண்ணரிப்பு ஏற்படாமல் வாவியை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்கமைய மட்டக்களப்பு வாவியோரம் சுமார் ஒன்றரை மீட்டர் மற்றும் இரண்டு மீட்டர் வரையான அளவிலான உயரமான தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு லேடி மெனிங் டிரைவ் வாவியோரத்தில் இத்திட்டத்தின் முதற்கட்டம் நடைமுறைப்படுத்துகிறது. இதற்கென 58 மீட்டர் நீளமான தடுப்புச் சுவர் சுமார் 4 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இத்திட்டம் நாலு மில்லியன் செலவில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் தொடர்ந்தும் மட்டக்களப்பு வாவியோரத்தில் இவ்வாறான தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.