
(சித்தா)
போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் விசேட டெங்கு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது 01.08.2025 ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்கள் சு.விக்னேஸ்பரன், சு.சஞ்சீவன், .ம.மனோதினி ஆகியோரின் மேற்பார்வையில் பிரதேச சபையின் உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் மற்றும் முன்னாள் சபை உறுப்பினர் ம.சுகிகரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் பழுகாமம், முனைத்தீவு, பட்டாபுரம், பெரியபோரதீவு போன்ற கிராமங்களை மையப்படுத்திய வகையில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தற்போது பரவி வரும் உயிர்கொல்லியான 'டெங்குநோய்' ஏற்படாமல் தடுப்போம் என்ற தொனிப்பொருளில் வீசியெறியப்பட்ட வெற்றுத் தகர டின்கள், தேங்காய் சிரட்டைகள், பாவிக்கப்படாத கொள்கலன்கள், டயர்கள் மற்றும் பொலித்தீன் உறைகள் போன்றவை இதன்போது முற்றாக அகற்றப்பட்டன.
இன்றைய மனித செயற்பாடுகளினால் டெங்கு நுளம்புகளை இல்லாதொழித்தலானது இலகுவான காரியமல்ல. எனவே இதுபோன்ற வேலைத்திட்டங்கள் எமது பிரதேசத்தை மையப்படுத்திய வகையில் எதிர்வரும் காலங்களிலும் நடைபெறும் என தவிசாளர் விமலநாதன் மதிமேனன் இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.




















