
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (04) இரவு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ்ஸில் பயணித்த பயணிகளை மீட்க முயன்ற இராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
இராணுவ வீரர்கள் கயிறுகளைப் பயன்படுத்தி பள்ளத்தாக்கில் இறங்க முயன்றபோது காயமடைந்ததாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு இராணுவ வீரர்களும் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இராணுவ வீரர்களில் ஒருவர் விபத்து நடந்தபோது எல்ல, கரடகொல்லவில் உள்ள தனது வீட்டில் விடுமுறையில் இருந்துள்ளார்.
இந்நிலையில், அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தியத்தலாவ இராணுவ முகாம் வீரர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்ட போது வழுக்கி விழுந்துள்ளார். இதன்போது, கீழே இறங்க முயன்ற மற்றொரு அதிகாரியும் விழுந்து காயமடைந்துள்ளார்.