அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் நிறுவனம், நாட்டில் பேரனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக இணைய சேவைக்கு 100 அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நன்கொடை தகவல் தொடர்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்த உதவும் எனவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மிகவும் திறம்பட மேற்கொள்ள உதவும் எனவும் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
சனிக்கிழமை (13) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இணையச் சேவைக்கான வன்பொருள் அலகுகள் ஏற்கனவே நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், அனர்த்த மீட்புப் பணிகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்காக அவற்றை அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.













