டித்வா புயல்; உதவித் தொகைக்காக கொழும்பிலிருந்து வந்த 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு !



‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய 25,000 ரூபாய் மானியத்திற்காக கொழும்பு மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1,138 நிராகரிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (23) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி தலைமையில் நடைபெற்றது.

டிசம்பர் 2 ஆம் திகதி நிலவரப்படி, கொழும்பு மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 71,193 என்றும், 25,000 ரூபாய் மானியத்திற்காக 49,946 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 3,192 விண்ணப்பங்கள் தொடர்புடைய மானியத்தை செலுத்துவதற்காக நிலுவையில் இருப்பதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.