2025 ஆம் ஆண்டில் யானைகளின் இறப்பு வீதம் அதிகரிப்பு !


கடந்த ஆண்டை (2024) விட இந்த ஆண்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 18 வரை 409 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் பிரதிப் பணிப்பாளர் யு.எல். தௌஃபிக் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு (2024) பதிவான யானைகளின் இறப்பு எண்ணிக்கை 388 என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் 71 யானைகள் இறந்துள்ளதாகவும், மின்சாரம் தாக்கி 56 யானைகள் இறந்துள்ளதாகவும், ரயில் மோதி 20 யானைகள் இறந்துள்ளதாகவும், வேட்டையாடியதால் 48 யானைகள் இறந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.