வீதியில் வைத்து RDA ஊழியரை தாக்கியவர் கைது ! தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது
கண்டி - குகாகொட வீதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் மண் மற்றும் கற்களை அகற்றிக் கொண்டிருந்த ஊழியருக்கும், அவ்வீதியில் பயணித்த லொறி ஒன்றிலிருந்த நபருக்கும் இடையில் நேற்று (14) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது லொறியிலிருந்த நபரால் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ ஒன்றை ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருந்ததுடன், அவ்வீடியோ சமூக ஊடகங்களில் பரவியிருந்தது.


.jpg)










