
எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி - அவிசாவளை வீதியின் மஹிங்கொட பகுதியில் நேற்று புதன்கிழமை (24) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரியிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் வந்த தனியார் பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் குழந்தையொன்றும் பலத்த காயமடைந்து, எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் 30 வயதுடைய பெண் எனவும், இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
சடலம் எஹெலியகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






.jpg)
.webp)




.jpg)