அரசாங்கத்தின் துரித முயற்சியினால் றீ பில்ட் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக சேதமடைந்த ரயில் பாதைகள் திருத்தப் பணிகள் யாவும் நிறைவடைந்ததன் பின்பு கடந்த சில நாட்களாக ரிச்சாத்த சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததை அடுத்து புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கான உதயதேவி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை திருகோணமலையிலிருந்து கொழும்பிற்கான சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பில் இருந்து செல்லும் பயணிகள் கல் ஓயா சந்தியில் இறங்கி திருமலையில் இருந்து வரும் கொழும்பு ரயிலில் மாற வேண்டும்.
இதேவேளை மாகோவில் இருந்து மட்டக்களப்புக்கான சரக்கு மற்றும் எரிபொருள் சேவைகளும் புதன்கிழமை தொடக்கம் மீண்டும் முன்னெடுக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.








.jpg)
.webp)



.jpg)